ADDED : செப் 13, 2026 04:11 PM
குறை தீர்ப்பாளர் நியமனம்
ஊட்டி: -
வளர்ச்சி அடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை;
வளர்ச்சி அடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி வாழ்வாதார திட்டத்தின் கீழ், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சட்டத்தை செயல்படுத்தி, புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் படி, நீலகிரி மாவட்டத்திற்கு, இத்திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக, அருள் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் : 8925811326, 9976558777 மற்றும் மின்னஞ்சல் முகவரி - thenilgirsombudsperson@gmail .com தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் மற்றும் இத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின், குறை தீர்ப்பாளரின் மொபைல் எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
