சுவர் ஏறுதல் சாகச பயிற்சி முகாம் நிறைவு என்.சி.சி., மாணவர்களுக்கு சான்றிதழ்
சுவர் ஏறுதல் சாகச பயிற்சி முகாம் நிறைவு என்.சி.சி., மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : செப் 13, 2026 04:03 PM
குன்னூர்:
குன்னூர் அருகே, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம்.ஆர்.சி.,) என்.சி.சி., மாணவர்களுக்கான ஐந்து நாள் நடந்த சுவர் ஏறுதல் சாகச பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் வழிகாட்டுதலின்படி, ஊட்டி 31 (டி.என்.,) இன்டிபென்டன்ட் கம்பெனி என்.சி.சி., சார்பில் நடந்த முகாமிற்கு கமாண்டிங் அதிகாரி கர்னல் சித்து தலைமை வகித்தார். மேஜர் ஷ்ரேய் கோட்னாலா முகாம் அதிகாரியாக செயல்பட்டார். கேப்டன் விஜய், ஜி.சி.ஐ., சோனியா மற்றும் ராணுவ பணியாளர் இந்திரன் ஆகியோர் முகாம் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், கர்நாடகா, கோவா மற்றும் கேரளா, லட்சத்தீவு என். சி. சி., இயக்ககங்களை சேர்ந்த, 41 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
எம்.ஆர்.சி., பயிற்றுனர்கள் சுபேதார் ராஜ், ஹவில்தார் முருகராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் சுவர் ஏறுதல் நுட்பங்கள், போல்டரிங், ராப்பல்லிங், பிலேயிங், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உபகரணங்களை கையாளும் பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். சுபேதார் சுப்பா ரெட்டி மாணவர்களை ஒருங்கிணைத்தார். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
