ADDED : செப் 13, 2026 03:11 PM
ஊட்டி: -
நீலகிரி மாவட்டத்தில், 108 தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை;
ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள, 108 தற்காலிக செவிலியர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 38 ஜெயில் ஹில் ரோடு, சி.டி., ஸ்கேன் (அருகில்), ஊட்டி, 643001, தொலைபேசி எண் : 0423 – 2449250 என்ற முகவரிக்கு உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு உரிய தகவல்கள் மற்றும் விண்ணப்பங்கள் நீலகிரி மாவட்ட தகவல் மையத்தில், (nilgiris.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
