ADDED : செப் 13, 2026 12:51 PM
ஊட்டி: -
ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேர்வு கூடத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் தேர்வு (நேர்முகத் தேர்வு இல்லாத பணிகள்) 19ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்த தேர்வில், காலை, 9:00 மணிக்கு, கொள்குறிவகை தேர்வில், 498, மற்றும் பகல், 2:00 மணிக்கு நடைபெறும் முறை தேர்வில், 3 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்வை, கண்காணிக்க ஏதுவாக, டி.என்.பி.எஸ்.சி., யால் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதவரும் தேர்வர்கள் காலை, 9:00 மணிக்குள்ளும், பிற்பகல் 2:00 மணிக்குள்ளும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும், தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
