/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்கள் நிறுத்த 'கான்கிரீட்' தளம்
/
வாகனங்கள் நிறுத்த 'கான்கிரீட்' தளம்
ADDED : பிப் 04, 2025 11:29 PM
கோத்தகிரி; கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், 'கான்கிரீட்' தளம் அமைக்கப்பட்டு வருவதால், வாகனங்கள் நிறுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, சாலையை ஒட்டி, அரசு அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாகனங்கள், நிறுத்த வேண்டிய நிலை இருந்தது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அலுவலக வலகத்தில் 'கான்கிரீட்' தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
பணி நிறைவடையும் பட்சத்தில், ஒரே இடத்தில் பல வாகனங்களை நிறுத்த முடியும். தவிர, நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.