/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் இரங்கல் கூட்டம் திரளானோர் பங்கேற்பு
/
பந்தலுாரில் இரங்கல் கூட்டம் திரளானோர் பங்கேற்பு
ADDED : ஏப் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் ; காஷ்மீர், பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின், ஆத்மா சாந்தியடைய, பந்தலுாரில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பந்தலுாரில் பா.ஜ., சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு நகர தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விளக்கு ஏற்றி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் தீபக்ராம், அண்ணாதுரை, ரவிச்சந்திரன், முரளி, யோகேஸ்வரன் மற்றம் உள்ளூர் மக்கள் திரளாக பங்கேற்றனர்.

