sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில்  மீண்டும் குழப்பம்!: பெயர்கள் நீக்கியும் கூடுதல் பேர் உள்ளதாக குற்றச்சாட்டு

/

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில்  மீண்டும் குழப்பம்!: பெயர்கள் நீக்கியும் கூடுதல் பேர் உள்ளதாக குற்றச்சாட்டு

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில்  மீண்டும் குழப்பம்!: பெயர்கள் நீக்கியும் கூடுதல் பேர் உள்ளதாக குற்றச்சாட்டு

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில்  மீண்டும் குழப்பம்!: பெயர்கள் நீக்கியும் கூடுதல் பேர் உள்ளதாக குற்றச்சாட்டு


ADDED : டிச 31, 2025 07:56 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சட்டசபை தொகுதியில், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 11 பூத்கள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில், 9,969 ஓட்டுக்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்., க்கு பிறகு, 10,334, ஓட்டுக்கள் இருந்தன. 676 ஓட்டுக்கள் மட்டுமே நீக்கப்பட்டது.

அதில், 1299 வாக்காளர்கள் உள்ள பாகம், 138ல், ஒரே பக்கத்தில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு ஆகியவை நீக்கப்படாமல் தற்காலிக வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

தி.மு.க.,வின் முன்னாள் நகர செயலாளர் வினோத்குமாரின் அழுத்தம் காரணமாக, அவசரமாக பதிவேற்றப்பட்டது. தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., சாந்திராமு, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார். மீண்டும் பட்டியல் மறு பரிசீலனை செய்யப்பட்டது. எனினும் தற்போதும் மீண்டும் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பெயர் நீக்கத்தில் குளறுபடி வாரியத்தில் உள்ள, 138 வது பாகத்தில் உள்ள, 1,299 பேரில், 400க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்க வேண்டிய நிலையில், முதற்கட்டமாக, 104 பேர் மட்டுமே நீக்கப்பட்டது. 883 பேர் கொண்ட 136 பூத்தில், 120 பேர் நீக்கி, 763 பேர் இருக்க வேண்டிய நிலையில், 1013 பேர் உள்ளனர். இந்த பூத், 147 எனவும் மாற்றப்பட்டுள்ளது.

137வது பூத், 148 என மாற்றப்பட்டதுடன், அதில், 1,033 பேர் இருந்த நிலையில், 120 பேரை நீக்கி உள்ளனர்.

அதன்பின், 913 என இருக்க வேண்டிய நிலையில், 1047 என அதிகரித்துள்ளது. பல பெயர்களும் அறியாத நிலையில் உள்ளது.

இவ்வாறு கன்டோன்மென்ட் வாரியத்தில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் குளறுபடிகள் நடந்து, நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.

நெடுந்துாரத்தில் ஓட்டுச்சாவடி மேலும், வெலிங்டனில் அருகில் உள்ள பூத்தில் இருக்க வேண்டிய சிலரின் ஓட்டுக்கள், 4 கி.மீ., தொலைவில் உள்ள ஓட்டுச்சாடவடியில் இணைக்கப்பட்டுள்ளது.

'இதே போல ஒரு பூத்தில், 500 பேர் மட்டுமே இருக்க வேண்டும்,' என, தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் உள்ளதால், இதனை சரி செய்தால் பணியாற்றும் பி.எல்.ஓ.,க்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என,வாக்காளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குன்னூர் கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,''தேர்தல் கமிஷன் உத்தரவுபடி ஒரு பூத்தில், 1200க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல அருகில் இருக்கும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட பூத்களில், அதிகமான வாக்காளர்கள் இருந்தால் மாற்றப்படுவர்.

ஒரு பூத்தில், 500 வாக்காளர்கள் மட்டுமே இங்குள்ள வாக்காளர்கள் கேட்கின்றனர். அது தேர்தல் கமிஷன் மட்டுமே முடிவு செய்யும். தற்போது புதிதாக, 19 பூத்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த திருத்தத்தின் போது இவை மாற்றப்பட்டது.

தற்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆதார் அட்டை முகவரியின் படியே வாக்காளர் பூத் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடம் மாறி இருந்தால், பார்ம்-8 கொடுத்து மாற்றலாம். மற்ற குறைகள் குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us