/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பம்: பழங்குடியின மக்களுக்கு உதவி செய்வது யார்?-
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பம்: பழங்குடியின மக்களுக்கு உதவி செய்வது யார்?-
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பம்: பழங்குடியின மக்களுக்கு உதவி செய்வது யார்?-
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பம்: பழங்குடியின மக்களுக்கு உதவி செய்வது யார்?-
ADDED : நவ 11, 2025 10:12 PM

பந்தலுார்: கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பழங்குடியின மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களாக உள்ளவர்களின், பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தவறாமல் இடம்பெறவும், வாக்காளர் அல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெறுவதை தவிர்க்கவும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் நடைபெற உள்ள, 16 வது சட்டசபை தேர்தலுக்கான, வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. டிச., 15ஆம் தேதி வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், இவற்றை பூர்த்தி செய்வதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த, 2002ல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, வாக்காளின் உறவு முறையினரின், வாக்காளர் பட்டியல் எண் மற்றும் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் மத்தியில், இந்த படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அத்திச்சால் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ஓமனா கூறுகையில், ''இதுவரை வாக்காளர் அடையாள அட்டையை மட்டுமே வைத்து ஓட்டு போட்டு வந்தோம். தற்போது புதிதாக விண்ணப்பத்தை கொடுத்து, பூர்த்தி செய்ய கூறியுள்ளனர்.
இதனால், விண்ணப்பங்களை என்ன செய்வது என்று தெரியாத நிலையில், எங்கள் ஓட்டுகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பழங்குடியின கிராமங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, அலுவலர்களை நியமித்தால் பயனாக இருக்கும்,''என்றார்.
ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''பழங்குடியின மக்கள் மத்தியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் மற்றும் விபரங்களை சேகரிப்பதற்கு, உதவிட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
எனவே, பழங்குடியின கிராமங்களில் நேரில் சென்று, உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்,'' என்றார்.

