/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
/
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: சிறப்பு ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 11, 2025 10:13 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு புறப்படும் மலை ரயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஊட்டி -குன்னுார் மலை ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.
தற்போது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த தீபாவளி விடுமுறை வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணம் செய்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் மலை ரயில், குன்னுார் வரை 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினிலும்; குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு டீசல் இன்ஜினிலும் இயக்கப்படுகிறது.அதில், மலை ரயிலில் ஆர்வத்துடன் பயணம் செய்யும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், குன்னுரில் இருந்து இறங்கி பஸ்களில் ஊட்டி செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வார இறுதி நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில் இயக்குவதுடன், 'எக்ஸ் கிளாஸ் இன்ஜின்' இயக்கத்தை, ஊட்டி வரை நீட்டிக்க வேண்டும்,' என்றனர்.

