/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காங்., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
காங்., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 18, 2024 12:32 AM
கோத்தகிரி;கோத்தகிரி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் லியாகத் அலி வரவேற்றார். கோத்தகிரி வட்டாரத் தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பூத் கமிட்டியை ஆய்வு செய்தார்.
இதில், 'வரும் லோக்சபா தேர்தலில், காங்., கூட்டணி கட்சி அறிவிக்கும் வேட்பாளரை, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது; தேர்தல் நேரத்தில் கட்சியினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணி மேற்கொள்வது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், எம்.எல்.ஏ., கணேஷ், கீழ் கோத்தகிரி வட்டாரத் தலைவர் மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், டாக்டர் கமலா சீராளன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

