/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராகுல் மீது வழக்கு பதிவு; காங்., ஆர்ப்பாட்டம்
/
ராகுல் மீது வழக்கு பதிவு; காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 10:37 PM
ஊட்டி; ஊட்டியில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., -காங்., எம்.பி.,மக்கள் பார்லிமென்ட் வளாகத்தில், நேற்று நடத்திய போராட்டத்தின் போது, ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் பா.ஜ., எம்.பி.,க்கள் இருவருக்கு மண்டை உடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, காங்., எம்.பி., ராகுல் மீது டில்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை கண்டித்து, காங்., கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் தலைமை வகித்தார். ஊட்டி நகர தலைவர் நித்ய சத்யா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மானிஷ், ஊட்டி வட்டார தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கோத்தகிரி வட்டார தலைவர் சில்லாபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

