ADDED : பிப் 15, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்., கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இளைஞர் காங்., மாநில தலைவர் லெனின் பிரசாத் பேசுகையில், வரும் லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், மாநகர், மாவட்ட தலைவர் கருப்புசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் மணி, தேசிய செயலாளர் வைசாக், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

