/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 07, 2024 11:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில் காங்., கட்சி சார்பில், தேர்தல் பத்திரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'தேர்தல் பத்திரம் என்ற பெயரில், தொழில் அதிபர்களை மிரட்டி, பல ஆயிரம் கோடி பா.ஜ., சட்டவிரோதமாக பெற்றுள்ளது. பணம் கொடுத்தவர்களின் விபரத்தை வெளியிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், அதனை செயல்படுத்த மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்,' என, தெரிவிக்கப்பட்டது.
அதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் கமலா சீராளன், மாவட்ட பொது செயலாளர் தேவராஜ், மாவட்ட செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

