/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதிஷ்டை தின விழா: கோவிலில் கோலாகலம்
/
பிரதிஷ்டை தின விழா: கோவிலில் கோலாகலம்
ADDED : ஜன 14, 2025 01:39 AM

பாலக்காடு:
கேரள மாநிலம், பாலக்காடு காடாங்கோட்டில் அமைந்துள்ள தேவி கோவிலில், பிரதிஷ்டை தினவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு விழா கடந்த, 9ம் தேதி துவங்கியது.
கடந்த, 11ம் தேதி, சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக விழா நடந்தது. காலை, 5:30 மணிக்கு அஷ்டதிரவ்ய மகாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக-, அலங்கார பூஜைகள், உச்சிக்கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 5:30 மணிக்கு மூன்று யானைகள் அலங்கார அணிவகுப்புடன், பஞ்சவாத்தியங்கள் முழங்க, யானை மீது அம்மன் எழுந்தருளி, மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக திருவீதியுலா நடந்தது. யானைகள் மீது உலா வந்த அம்மனை, மக்கள் பக்திபரவசத்துடன் வழிபட்டனர்.
திருவீதியுலாவில், திருச்சூரில் காணநாட்டுக்கரை புலியாட்டக் குழுவினரின் புலியாட்டமும், தையம் களி, சிறுவர் - சிறுமியர்களின் வேஷங்கள் இடம்பெற்றிருந்தன. சாலையின் இருபக்கமும் கூடியிருந்த மக்கள், இந்நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.