/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நாட்டின் அரசியல் சாசன நாள் உறுதிமொழி
/
நாட்டின் அரசியல் சாசன நாள் உறுதிமொழி
ADDED : நவ 30, 2024 04:44 AM
கோத்தகிரி : கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாட்டின், 75வது அரசியல் அமைப்பு சாசன நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில், உறுதிமொழி வாசிக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில், அரசியல் அமைப்பு சட்டம், நாட்டு குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பள்ளி முன்னாள் மாணவர் ராஜூ விளக்கினார். ஆசிரியை கமலா உட்பட, பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.