/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.8.62 கோடியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கம்
/
ரூ.8.62 கோடியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கம்
ரூ.8.62 கோடியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கம்
ரூ.8.62 கோடியில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கம்
ADDED : மார் 04, 2024 11:58 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டை இடித்துவிட்டு, 8.62 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டும் பணிகள் துவங்கின.
மேட்டுப்பாளையத்தில், 1984ம் ஆண்டு பஸ் ஸ்டாண்ட், கடைகள், அண்ணா வணிக வளாகம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டி, 39 ஆண்டுகள் ஆனதால், கட்டடத்தின் தாங்கும் திறன் மற்றும் கடைகள், பயணிகள் நிற்கும் கான்கிரீட் வளாகம் ஆகியவற்றில் விரிசில் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின், பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி, பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு, புதிதாக கட்ட மேட்டுப்பாளையம் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள் கட்ட அனுமதி வழங்கிய தமிழக அரசு, 8.62 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்தது. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
இது குறித்து மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அஷ்ரப் அலி கூறியதாவது: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழல் கூடம், பஸ்கள் நிற்கும் இடங்கள், கடைகள் ஆகியவற்றை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் ஆகிய பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கடைகள் மற்றும் கட்டடங்களை இடித்து விட்டு, அங்கு புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும். கட்டுமான பணிகளுக்கு, எவ்வித இடையூறு ஏற்படாமல் இருக்க, தகர சீட்டால் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன.
டவுன் பஸ்கள், ஊட்டி, கோத்தகிரி பஸ்கள் நிற்கும் இடம், கடைகள் ஆகியவற்றை இடித்து விட்டு, இரண்டாவது கட்டமாக, பஸ்கள் நிற்கும் பகுதி, கடைகள் ஆகியவை கட்டப்படும். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

