/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்ட எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
/
தேயிலை தோட்ட எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
தேயிலை தோட்ட எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
தேயிலை தோட்ட எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
ADDED : ஜன 05, 2024 11:34 PM

கூடலுார்:கூடலுாரில் பாண்டியார் டான்டீயில், வன எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுாரில் பாண்டியார், சேரங்கோடு, சேரம்பாடி, நெல்லியாளம் மற்றும் நடுவட்டம் அரசு தேயிலை (டான்டீ) தோட்டங்கள் உள்ளது. இதன் எல்லைகள் பெரும்பாலும் வனத்தை ஒட்டிய அமைந்துள்ளன. கோடை காலத்தில் வனத்தில் ஏற்படும் தீ பரவி தேயிலை செடிகள் பாதிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.
இதனை தடுக்க, டான்டீ நிர்வாகம், கோடையில், வனத்தை ஒட்டிய எல்லைகளில், தீ தடுப்பு கேடுகள் அமைத்து வருகின்றனர்.
அதன்படி நடப்பு ஆண்டு பாண்டியார் டான்டீ தேயிலை தோட்ட எல்லை மற்றும் கோழிக்கோடு சாலையை பகுதிகளில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலத்தில், வனப்பகுதியில் ஏற்படும் வனத்தீ, தேயிலை செடிகளுக்கு பரவும் சூழ்நிலை உள்ளதால், முன்னெச்சரிக்கையாக, வனத்தை ஒட்டிய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது,' என்றனர்.