/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் மேக மூட்டமான காலநிலை தேயிலைக்கு கொப்புள நோய் அபாயம்
/
தொடரும் மேக மூட்டமான காலநிலை தேயிலைக்கு கொப்புள நோய் அபாயம்
தொடரும் மேக மூட்டமான காலநிலை தேயிலைக்கு கொப்புள நோய் அபாயம்
தொடரும் மேக மூட்டமான காலநிலை தேயிலைக்கு கொப்புள நோய் அபாயம்
ADDED : அக் 19, 2025 10:12 PM

கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டமான காலநிலை தொடர்வதால், தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
உரமிட்டு பராமரிப்பு செய்த தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு பசுந்தேயிலை மகசூல், அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
தோட்ட பராமரிப்பு, உரம் உள்ளிட்ட இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட செலவினம் அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
இந்நிலையில், மழைக்கு நடுவே, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.