/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
களைகட்டிய பந்தலுார் பஜார் தீபாவளி விற்பனை 'ஜோர்'
/
களைகட்டிய பந்தலுார் பஜார் தீபாவளி விற்பனை 'ஜோர்'
ADDED : அக் 19, 2025 10:12 PM

பந்தலுார்: தீபாவளி பண்டிகை இறுதி கட்ட ஜவுளி விற்பனையில் பந்தலுார் பஜார் களை கட்டியது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, சாலை ஓரங்கள் மற்றும் காலியாக உள்ள கடைகளில் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கடைகள் அமைப்பர்.
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜார் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம், அதிகரித்து விற்பனை களை கட்டியது.
நேற்று பொருட்கள் வாங்க இறுதி நாள் என்பதால், காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்தது. மக்கள் குறைந்த விலைக்கு, ஜவுளிகளை வாங்கிச் சென்றனர்.
மக்கள் கூட்டம் அதிகரிப்பால் தற்காலிக ஜவுளிக்கடைகளுக்கு மட்டுமின்றி, அனைத்து கடைகளுக்கும் வருவாய் கிடைத்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.