கோத்தகிரியில் தொடரும் மழை கோடநாடு காட்சி முனை ‘வெறிச்’
கோத்தகிரியில் தொடரும் மழை கோடநாடு காட்சி முனை ‘வெறிச்’
UPDATED : அக் 21, 2026 04:58 PM
ADDED : அக் 21, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி:
கோத்தகிரியில் பெய்து வரும் மழையால் கோடநாடு காட்சி முனை வெறிச்சோடி காணப்பட்டது.
நீலகிரியில் கோடநாடு காட்சி முனை முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த காட்சி முனையில், கோடை சீசன் நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோடநாடு பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்து வருகிறது. அத்துடன், மேக மூட்டமான காலநிலை நிலவுகிறது. நேற்று இங்கு பெய்த மழையின் காரபமாக, சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து, காட்சி முனை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
