/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் குறைந்த மின்னழுத்த பிரச்னை: மக்கள் பாதிப்பு
/
தொடரும் குறைந்த மின்னழுத்த பிரச்னை: மக்கள் பாதிப்பு
தொடரும் குறைந்த மின்னழுத்த பிரச்னை: மக்கள் பாதிப்பு
தொடரும் குறைந்த மின்னழுத்த பிரச்னை: மக்கள் பாதிப்பு
ADDED : நவ 10, 2025 11:35 PM
குன்னுார்: குன்னுார் ஜெகதளா கலைமகள் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னுார், அருவங்காடு ஜெகதளா கலைமகள் பகுதியில் இருந்து வெடிமருந்து தொழிற்சாலை, சி.எப்.எல்.யூ., தொழிற்சங்கம் பகுதி வரையிலான பகுதிகளில், கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதுடன், குறைந்த மின்னழுத்தமும் நீடிக்கிறது. காலை நேரத்தில் இல்லத்தரசிகள் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லவும், படிக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ஜெகதளா பேரூராட்சி பா.ஜ., மண்டல துணை தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,''கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி குடிநீர் தொட்டி அருகே, இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மரம் விழுந்தது. இதன் பிறகு, இந்த பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதுடன் குறைந்த மின்னழுத்த பிரச்னையும் நீடிப்பதால், உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'டிரான்ஸ்பார்மர் நாளை (இன்று) மாற்றப்படும். மின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.

