/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் எழுத்து தேர்வு: 400 பேர் பங்கேற்பு
/
போலீஸ் எழுத்து தேர்வு: 400 பேர் பங்கேற்பு
ADDED : நவ 10, 2025 11:34 PM
ஊட்டி: ஊட்டியில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில், 400 பேர் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில், 2025ம் ஆண்டிற்கான காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது.
அதில், நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு இம்மாவட்டத்தில், 530 பேர் விண்ணப்பித்தனர். மாவட்ட எஸ்.பி., நிஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அரசு கலைக்கல்லுாரி தேர்வு மையத்தில், 72 பெண்கள் உட்பட, 400 பேர் தேர்வு எழுதினர். கோவை சரக காவல் துறை துணை தலைவர், சசி மோகன் ஆய்வு செய்தார். 140 போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

