ADDED : நவ 10, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் ஜோசப் பள்ளியில் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
'தேசிய மற்றும் சர்வதேச சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, 6 மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு 'வைட்டமின்-ஏ' சப்ளிமென்ட் மாத்திரை வழங்க வேண்டும்,' என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மாத்திரை மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜோசப் பள்ளி அகாடமியில் நடந்தது. நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் ஜான் பிரிட்டோ துவக்கி வைத்தார். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், சுகாதார துறையினர் செய் திருந்தனர்.

