sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாநிலத்தில் நீலகிரியில் மட்டும் பால் விலை கூடுதல் ஏன்?மலை மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு

/

மாநிலத்தில் நீலகிரியில் மட்டும் பால் விலை கூடுதல் ஏன்?மலை மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு

மாநிலத்தில் நீலகிரியில் மட்டும் பால் விலை கூடுதல் ஏன்?மலை மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு

மாநிலத்தில் நீலகிரியில் மட்டும் பால் விலை கூடுதல் ஏன்?மலை மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு


ADDED : நவ 10, 2025 11:33 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, நீலகிரி மலை மாவட்டத்தில் மட்டும் ஆவின் பால் உட்பட பிற பொருட்களின் விலை கூடுதலாக உள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்; பால் பெருட்களுக்கு பில் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில், 15 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். மாவட்டத்தில், 2,510 பால் வழங்கும் உறுப்பினர்களிடமிருந்து தினமும், 11 ஆயிரத்து 600 லிட்டர் பால் கொள்முதல் செய்வதுடன், பற்றாக்குறையாக உள்ள, 24 ஆயிரம் லிட்டர் பால் கோவையில் இருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. அதில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட, நீலகிரியில் மட்டுமே ஆவின் பால், தயிர் உட்பட ஆவின் பொருட்களின் விலை கூடுதலாக உள்ளது.

பிற மாவட்டங்களில், 22 ரூபாய்க்கு விற்கப்படும் அரை லிட்டர் ஆவின் 'டிலைட்' பால், 5 ரூபாய் கூடுதலாக, 27 ரூபாய்க்கும், 35 ரூபாய்க்கு விற்கும் அரை லிட்டர் ஆவின் தயிர், 8 ரூபாய் கூடுதலாக, 43 ரூபாய்க்கும் நீலகிரியில் விற்கப்படுகிறது.

இதற்கான காரணம் கேட்டு, குன்னுார் நுகர்வோர் அமைப்புகள் சார்பில், மாநில முதல், மாவட்ட கலெக்டர், பால்வளத்துறை அமைச்சர் வரை பலமுறை மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

நுகர்வோர் அமைப்பு தலைவர் மனோகரன் கூறியதாவது:

அரசு நிர்ணயித்த விலையை விட, நீலகிரியில் ஆவின் பால் பொருட்கள் விலை கூடுதலாக விற்பது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாவட்டங்களில் கால் லிட்டர் பால் வழங்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இவை வழங்கப்படுவதில்லை.

பால் விலை உயர்விற்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பால் நுகர்வோர் வழக்கு தொடுக்க முடிவு செய்த போதும், இதற்கான உரிய பில் இல்லாததால் கிடப்பில் உள்ளது. அரசு நிர்வாகம் மலை மாவட்ட மக்களிடம் மறைமுக சுரண்டலில் ஈடுபடுவது நுகர்வோரின் உரிமையை மறுப்பதாக உள்ளது. எனவே, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வாங்கும் நுகர்வோருக்கு கட்டாயம் பில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்திய போதும், 'மலை போக்குவரத்து செலவு, ஹில் அலவன்ஸ், ஆவின் லாபம்,' போன்ற காரணங்களால், இங்கு பால் விலை சற்று உயர்ந்துள்ளதாக, மழுப்பலான பதில்களை தரும் ஆவின் நிர்வாகம், இவ்வாறு கூறுவதை தவிர்த்து, மற்ற மாவட்டங்களை போல இங்கும் உரிய விலைக்கு பால் பொருட்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆவின் பொது மேலாளர் ராஜேஷ்குமார் கூறுகையில்,'' நீலகிரி மலை பகுதியில் பாலுக்கு கூடுதல் விலை வசூலிக்க அனுமதி உள்ளது. ஆனால், இதற்கான அரசு ஆணை இல்லை.

இந்த பிரச்னை தொடர்பான வழக்கிலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பும் வந்துள்ளது. பாலுக்கான பில் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us