/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் தொடரும் தெரு விளக்கு; கழிவுநீர் பிரச்னை; மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
நகரில் தொடரும் தெரு விளக்கு; கழிவுநீர் பிரச்னை; மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
நகரில் தொடரும் தெரு விளக்கு; கழிவுநீர் பிரச்னை; மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
நகரில் தொடரும் தெரு விளக்கு; கழிவுநீர் பிரச்னை; மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : செப் 30, 2024 11:00 PM
ஊட்டி : 'ஊட்டி நகரில், தெரு விளக்குகளுக்காக, 60 லட்சம் ரூபாய் செலவிட்டும் சரியாக எரிவதில்லை; பல இடங்களில் கழிவுநீர் ஓடுகிறது,' என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
ஊட்டி நகராட்சி சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து வார்டு பிரச்னைகள் பேசப்பட்டன.
ஜார்ஜ் (தி.மு.க.,) : நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மார்லிமந்து தடுப்பணையில் கழிவுகள் அதிகளவில் தேங்கி இருப்பதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில், தெரு விளக்குகளுக்காக, 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒன்று கூட உருப்படியாக எரிவதில்லை. ஏ.டி.சி., யிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட நடைப்பாதை தனியார் ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்தபா (தி.மு.க.,): நகரில் நடந்து வரும் கழிப்பறை கட்டும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோஸ் கார்டன் சாலையில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (தி.மு.க.,) : காந்தள் , பிங்கர் போஸ்ட் பகுதியில் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடால் நாறி கிடக்கிறது. குறிப்பாக காந்தள் பகுதியில் குப்பை லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல முறை மன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகுந்தலா ( அ. தி. மு.க.,): வார்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் பட்டியலிட்டு தெரிவித்து வருகிறேன். நடவடிக்கை எடுக்காததால் வார்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
படிப்படியாக வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா: வார்டுகளில் அன்றாட அடிப்படை வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
முக்கிய திட்டப்பணிகள் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதி பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.