/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்கா
ADDED : அக் 24, 2025 11:35 PM

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மழை காரணமாக சில பூக்கள் அழுகினாலும் பெரும்பாலான மலர் செடிகள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அக்., நவ., மாதங்களில் நடக்கும் இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
இரண்டாவது சீசனுக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சால்வியா, பிளாக்ஸ், டெல்பீனியம் உட்பட 20க்கும் மேற்பட்ட மலர் வகைகள் பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது; இவற்றின் முன்பு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கன மழையில் டேலியா, மேரி கோல்டு உள்ளிட்ட மலர்கள் பல இடங்களில் அழுகியுள்ளன.
இவற்றை அவ்வப்போது தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
எனினும் சில இடங்களில் டேலியா மொட்டுக்கள் விரிந்து அழகாக காட்சியளிக்கிறது.

