/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு அவசியம்
/
தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு அவசியம்
ADDED : மார் 20, 2024 01:19 AM
ஊட்டி;ஊட்டியில் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:
தேர்தல் நன்னடத்தை அமலில் உள்ளதால், வாக்காளர்களை கவரும் வகையில், டோக்கன் வினியோகத்தில் பணம், பொருள், அடகு வைக்கப்பட்டு நகைகளை இலவசமாக திருப்பி தருவது, அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவது கூடாது.
அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக விதிமுறைகளின் படி நடைபெற, பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.
அச்சக உரிமையாளர்கள், அரசியல் கட்சி வேட்பாளர் மற்றும் இதர தேர்தல் தொடர்புடைய விளம்பரங்கள், நோட்டீஸ் மற்றும் 'பிளக்ஸ்' அச்சிடும் பட்சத்தில், தங்களின் நிறுவனத்தின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் அச்சிட்டு, அதன் நகலை, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் செலவின கணக்கு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழில் செய்யவேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

