/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வார்டுகளில் வளர்ச்சி பணிகள் இழுத்தடிப்பு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
வார்டுகளில் வளர்ச்சி பணிகள் இழுத்தடிப்பு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
வார்டுகளில் வளர்ச்சி பணிகள் இழுத்தடிப்பு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
வார்டுகளில் வளர்ச்சி பணிகள் இழுத்தடிப்பு: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : செப் 29, 2025 09:56 PM
ஊட்டி:
ஊட்டி நகராட்சி வார்டுகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
ஊட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் கணேசன் , துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பல கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஊட்டி நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வார்டுகளில் தெரு நாய் தொல்லை , குடிநீர் வினியோகத்தில் அடிக்கடி தடை , தெரு விளக்குகள் எரிவதில்லை , சர்வதேச சுற்றுலா தலமாக உள்ள ஊட்டியில் சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் வகையில் கழிப்பிடங்கள் அவல நிலையில் உள்ளன.
மக்கள் நடந்து செல்லும் இடங்களில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டி மார்க்கெட் புதிய கடைகள் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தி வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''வார்டு வாரியாக வளர்ச்சி திட்ட பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோர்ட் வழிகாட்டுதல் படி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஊட்டி வரும் சுற்றுலா பயணியரின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். விதி மீறிய கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விதிமீறல் கண்டறியும் பட்சத்தில் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.