/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கணும்: நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 28, 2025 03:26 AM
ஊட்டி: 'ஊட்டி நகராட்சி மார்க்கெட் முதற்கட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி நகர மன்ற மாதாந்திர கூட்டம் நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு நகராட்சி வாயிலாக அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி நகரில் சாலையோரங்களில உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விரைந்து பூர்த்தி செய்திடவும், வாக்காளர்கள் விடுபடாமல் இருக்கவும் அனைத்து கவுன்சிலர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள டெண்டர் விட்டால், உடனடியாக 'ஒர்க் ஆர்டர்' கொடுத்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள பொது கழிப்பிடங்களுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்து சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து கழிப்பிடங்களுக்கும் மின் விளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் முதற்கட்டமாக கடைகளின் கட்டுமான பணிகளை முடித்த பின், இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். முதற்கட்ட பணிகள் முடிந்தவுடன், வியாபாரிகளை அங்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.