ADDED : நவ 28, 2025 03:25 AM
பாலக்காடு: பாலக்காடு அருகே, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 23 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் டைமண்ட் மோதிரம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்சங்கர். இவர் குடும்பத்துடன் கடந்த 25ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டது. படுக்கை அறை அலமாரியில் பாதுகாத்து வைத்திருந்த, 23 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம், டைமண்ட் மோதிரம் ஓன்று திருட்டு போனது தெரிந்தது.
இதையடுத்து, புதுச்சேரி (கசபா) போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையிலான போலீசார், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்கின்றனர்.

