தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புலி தாக்கி பசுமாடு உயிரிழப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு

புலி தாக்கி பசுமாடு உயிரிழப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு

புலி தாக்கி பசுமாடு உயிரிழப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு


UPDATED : நவ 29, 2026 06:45 PM

ADDED : நவ 29, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 06:45 PM ADDED : நவ 29, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்: பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில், கர்ப்பிணி பசுவை புலி தாக்கிக் கொன்றது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பந்தலூர் அருகே அம்பலமூலா, வட்டக்கொல்லி, முள்ளன்வயல் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக புலி ஒன்று கிராம பகுதிக்கு வந்து செல்கிறது.

இதுகுறித்து ஆய்வு செய்து, புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்., 2-ம் தேதி நடந்த கிராம சபையில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வனத்துறையினர் அலட்சியம் காட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அம்பலமூலா அருகே பாம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த சிவமணி என்பவர் கொட்டகைக்குள் புகுந்த புலி, இவர் வளர்த்து வந்த, 4- வயது கர்ப்பிணி பசுவை தாக்கி கொன்றுள்ளது.

பசுவின் வயிற்றில் இருந்த குட்டியை வெளியே இழுத்து போட்டு உள்ளது.

நேற்று காலை இந்த பகுதிக்கு சென்ற குடும்பத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

புலி தாக்கி உயிரிழந்த கால்நடை உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. தானியங்கி கேமரா வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us