/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதி: மத்திய குழு ஆய்வு நிறைவு
/
வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதி: மத்திய குழு ஆய்வு நிறைவு
வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதி: மத்திய குழு ஆய்வு நிறைவு
வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதி: மத்திய குழு ஆய்வு நிறைவு
ADDED : அக் 21, 2024 11:13 PM

கூடலுார், : மேல் கூடலுார் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல், மற்றும் புவி இயற்பியல் துறையினரின் ஆய்வு பணிகள் நிறைவு பெற்றன.
மேல் கூடலுார் கோக்கால் பகுதியில், ஜூன் மாதம், 27, 28ம் தேதிகளில், பெய்த பலத்த மழையின் போது, 'ஒன்றரை சென்ட்' குடியிருப்பு பகுதியில், 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்லம் கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. அதில், வசித்தவர்கள் வீடுகளை காலி செய்து வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். விரிசல் தொடர்ந்து அதிகரித்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து, ஆக., 7ம் முதல் மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் விரிசல் ஏற்பட்ட கட்டடங்கள், நீரோடைகளின் நீரோட்டம், கழிவுநீர்கள், மழைநீர் வழிந்தோடும் வழிகளை ஆய்வு செய்தனர். மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
ஆய்வு அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள்; ஐதராபாத்தில் இயங்கி வரும் புவி இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, 18ம் தேதி முதல் கோக்கால் அருகே, வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியின் மண்ணின் தன்மை, நிலத்தினுள் நீரோடைகள் குறித்து நவீன இயந்திரம் மூலம் 'வெர்டிகல் எலக்ட்ரிகல் சவுண்ட்' சோதனைகளை மூன்று நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
அதிகாரிகள் கூறுகையில், 'விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் ஆய்வு குழுவினர் நிலத்தின் தன்மை, பூமிக்குள் உள்ள நீர் நிலைகள் குறித்து மூன்று நாட்கள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்களின் ஆய்வு அறிக்கை கிடைத்த பின், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.

