/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டடத்தில் விரிசல்; மழையால் ஒழுகும் அவலம்: அச்சத்தில் போலீஸ் குடும்பங்கள்

ADDED : ஏப் 06, 2025 09:32 PM

ஊட்டி; ஊட்டியில் போலீசார் குடியிருக்கும் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டுள்ள அபாயத்தால் போலீசார் அச்சத்துடன் குடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் போலீசார் குடியிருக்க நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கான்கிரீட் கட்டடத்தை முறையாக பராமரிக்காமல் விட்டுள்ளனர்.
குடியிருப்பு வெளிப்புறங்களில் முட்புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது. கட்டடங்களில் உள்ள பால்கனி கட்டடம் ஆங்காங்கே பெயர்ந்து விழுகிறது. மழை சமயத்தில் ஒழுகும் நீரால் கட்டடங்கள் சேதமாகி விரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருக்கும் போலீசார் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால்,குடியிருப்பு பராமரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால், போலீசார் சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பெரும்பாலான குடியிருப்புகளில், மழை காலங்களில் அதிக அளவில் ஒழுகுவதால் அச்சத்துடன் குடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து, போலீஸ் குடியிருப்புகளை பராமரித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.