ADDED : மார் 10, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பொன்னாண்டாம்பாளையத்தில் ஒளவையார் பூங்கா உருவாக்கப்பட்டது.
கணியூர் ஊராட்சி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் வனத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் பல வகையான மரங்கன்றுகளை நடவு செய்து, ஒளவையார் பூங்காவை உருவாக்கினர்.
கணியூர் ஊராட்சியை சேர்ந்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி, ராஜேஸ்வரி, சங்கமித்ரா, வக்கீல் ரேணுகாதேவி, ஆசிரியை கலைச்செல்வி மற்றும் தரணி ஆகியோர் பொதுமக்களோடு பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஊராட்சி தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் ராஜூ மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் பலர் பங்கேற்றனர்.

