/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொளப்பள்ளி பஜாரில் மக்கள் கூட்டம் ஜவுளி விற்பனையால் வியாபாரிகள் 'குஷி'
/
கொளப்பள்ளி பஜாரில் மக்கள் கூட்டம் ஜவுளி விற்பனையால் வியாபாரிகள் 'குஷி'
கொளப்பள்ளி பஜாரில் மக்கள் கூட்டம் ஜவுளி விற்பனையால் வியாபாரிகள் 'குஷி'
கொளப்பள்ளி பஜாரில் மக்கள் கூட்டம் ஜவுளி விற்பனையால் வியாபாரிகள் 'குஷி'
ADDED : அக் 31, 2024 09:23 PM

பந்தலுார்; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, பந்தலுார் அருகே கொளப்பள்ளி பஜார் பகுதியில், கேரளா மாநிலம் கோழிக்கோடு; சுல்தான் பத்தேரி; மானந்தவாடி; கண்ணனுார்; மலப்புரம் மற்றும் தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருச்செங்கோடு, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் தற்காலிகமாக கடைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர். இங்கு குறைந்த விலையில் அனைத்து வகை ஜவுளி வகைகள் கிடைக்கும் என்பதால், உள்ளூர் கடை வியாபாரிகள் தங்கள் கடைகளை, 10 நாட்களுக்கு காலி செய்துவிட்டு வாடகைக்கு கொடுப்பதுடன், கடைகளின் வாசல் மற்றும் சாலை ஓரங்களிலும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
நடப்பாண்டும், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள், கொளப்பள்ளி பஜாரில் அமைக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் போதிய அளவு வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்ட நிலையில், 'டான்டீ' தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கியது மற்றும் இறுதி நாள் பர்ச்சேஸ் என நேற்று முன்தினம் மாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பகுதியில் ஜவுளி ரகங்களை எடுக்க கூடினர்.
மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கொளப்பள்ளி முதல் அய்யன்கொல்லி செல்லும் சாலையில், வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 12:30 மணி வரை வியாபாரம் நடைபெற்றதால் சேரம்பாடி வனத்துறையினரும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதே போல், பந்தலுார் பஜார் பகுதியிலும் வெளியூர் வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து, வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

