/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜாரில் நடைபாதை சேதம் :மக்கள் தடுமாறி விழும் அபாயம்
/
பஜாரில் நடைபாதை சேதம் :மக்கள் தடுமாறி விழும் அபாயம்
பஜாரில் நடைபாதை சேதம் :மக்கள் தடுமாறி விழும் அபாயம்
பஜாரில் நடைபாதை சேதம் :மக்கள் தடுமாறி விழும் அபாயம்
ADDED : பிப் 14, 2025 09:45 PM

கோத்தகிரி:
கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, குன்னுார் பஸ் நிறுத்தம் செல்லும் நடைபாதை, மோசமாக உள்ளதால், மக்கள் தடுக்கி விழும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஜெகதளா ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நடைபாதை, கட்டபெட்டு, நடுஹட்டி மற்றும் ஒன்னோரை கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக அமைந்துள்ளது.
தவிர, குன்னுார் பஸ் நிறுத்தம் சென்று, அங்கிருந்து வெளியூர்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, இந்த நடைபாதை, ஜெகதளா பேரூராட்சிக்கு சொந்தமானது.
கடந்த பல ஆண்டுகளாக, நடைபாதை சீரமைக்காத நிலையில், படிகளில் கான்கிரீட் பெயர்ந்து, குழிகள் ஏற்பட்டுள்ளன. தவிர நடைபாதையை ஒட்டி, அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், போதிய பராமரிப்பு இல்லாமல் அடைப்பட்டு கழிவு நீர் நடைப்பாதையில் ஓடுகிறது.
இதனால், பொதுமக்கள், துர்நாற்றத்திற்கு இடையே சேதமடைந்த நடைப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள், குறிப்பாக. பள்ளி மாணவ, மாணவியர் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, சேதமடைந்த நடைபாதையை சீரமைத்து, கழிவுநீர் கால்வாயை துார் வார சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது அவசியம்.