/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்து வரும் சாலையால் பாதிப்பு
/
சேதமடைந்து வரும் சாலையால் பாதிப்பு
ADDED : அக் 11, 2024 10:02 PM

கூடலுார் : கூடலுார் செம்பாலா அருகே, சாலை சேதமடைந்த வருவது வாகன விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை உள்ளூர் வாகன போக்குவரத்துக்கு மற்றுமின்றி, கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், திருச்சூர் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரையிலான சாலை, சில ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது.
ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரையிலான, 2 கி.மீ., சாலை சீரமைக்க வில்லை. சாலை பல இடங்களில், சேதமடைந்தது. தற்போது பெய்து வரும் பருவமழையில், இந்த சாலையில் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டு, விபத்துகள் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில்,'இச்சாலை மூன்று மாநில வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழிதடமாகும். ஏற்கனவே சேதமடைந்த சாலை, தற்போது பெய்து வரும் அளவில் தொடர்ந்து சேதமடைந்து, வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.