/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்; தோட்டத்தை ஆய்வு செய்த வனத்துறையினர்

ADDED : பிப் 14, 2024 09:40 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லியாளம் வாழவயல் பகுதியில், அதிகளவிலான விவசாயிகள் நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது யானைகள் வந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை, 300-க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்களை அடியோடு சாய்த்து, சேதப்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், அறுவடைக்கு தயாராகும் சூழலில், வாழை மரங்களை யானை சேதப்படுத்தியது, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி பிரான்சிஸ் கூறுகையில், ''கடன் வாங்கி வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தோம். யானை முழுவதுமாக சேதப்படுத்தியதால் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதியில், பிதர்காடு வனச்சரக வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன், வனக்காவலர் முனியாண்டி, வேட்டை தடுப்பு காவலர் கலை கோவில் உள்ளிட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், விவசாய தோட்டத்தை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிட்டுள்ள, யானையை துரத்தும் பணியிலும் வனக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.