தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிழற்குடை சேதம் பயணிகள் அவதி

நிழற்குடை சேதம் பயணிகள் அவதி

நிழற்குடை சேதம் பயணிகள் அவதி


UPDATED : நவ 09, 2026 12:00 AM

ADDED : நவ 08, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:00 AM ADDED : நவ 08, 2026 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

புளியாம்பாறை ஜங்ஷன் பகுதியில் பயணிகள் காத்திருப்பதற்காக, 2006ல், நெல்லியாளம் நகராட்சி சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலையில் உள்ளது.

சேதமடைந்த நிழற் குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வலியுறுத்தியும், அதற்கான நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'நேரடி பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், ஆட்டோ, ஜீப் போன்ற தனியார் வாகனங்களை போக்குவரத்துக்கு நம்பி உள்ளோம். பயணிகள் காத்திருக்க வசதியாக அமைக்கப்பட்ட நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்து முடியாத நிலையில் உள்ளது. எனவே, அதனை அகற்றிவிட்டு புதிய நிழற் குடை அமைக்க வேண்டும்.' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us