/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதிப்பு
/
இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதிப்பு
ADDED : மே 14, 2025 11:04 PM

குன்னுார், ; குன்னுார் ஜெகதளா சாலையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கடைகள் அமைக்கப்படுவதால் மக்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.
குன்னுார் ஜெகதளா சாலையில், டி.எப்.எல். யு., தொழிற்சங்கம் அருகே சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மிகவும் குறுகிய இந்த இடத்தில், கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் ஒரு மினி பஸ் மட்டுமே செல்லும் அளவிற்கு இடம் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்குள்ள கடைகளால், சாலையில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் மக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.