/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அம்பலவயல் வனப்பகுதியில் பரவிய தீ வன உயிரினங்கள் பாதிப்பு
/
அம்பலவயல் வனப்பகுதியில் பரவிய தீ வன உயிரினங்கள் பாதிப்பு
அம்பலவயல் வனப்பகுதியில் பரவிய தீ வன உயிரினங்கள் பாதிப்பு
அம்பலவயல் வனப்பகுதியில் பரவிய தீ வன உயிரினங்கள் பாதிப்பு
ADDED : மார் 07, 2024 04:47 AM

பந்தலுார், : பந்தலுார் அருகே அம்பலவயல் வனப்பகுதியில், பரவிய காட்டுத் தீயால் வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பந்தலுார் அருகே, மாநில எல்லையில் அய்யன்கொல்லி அம்பலவயல் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் வைத்த தீயால் வனப்பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
புல்வெளி மற்றும் உயரமான மரங்கள் தீயில் எரிந்து கருகியதுடன், ஊர்வன மற்றும் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் தீயில் கருகி உள்ளன.
இரவில் காட்டு தீ பரவியதால், பொதுமக்களால் உடனடியாக சென்று தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினரும் இரவு நேரத்தில், சம்பவ இடத்திற்கு வந்து உனடியாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதி வனம் முழுவதும் எரிந்து, முழுமையாக பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஞ்சர் அய்யனார் கூறுகையில்,'' அப்பகுதியில் வருவாய்; வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. அதில், சமூக விரோதிகள் வைத்த தீயால் ஏழு ஏக்கர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

