/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நிழற்குடை; பயணிகளுக்கு பாதிப்பு
/
சேதமடைந்த நிழற்குடை; பயணிகளுக்கு பாதிப்பு
ADDED : நவ 27, 2024 08:55 PM

கோத்தகிரி; கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில், நிழற்குடை சேதமடைந்துள்ளதால், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சி பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று, இயற்கை காட்சிகளை கண்டுக்களித்து வருகின்றனர்.
நீர்வீழ்ச்சி பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், குஞ்சப்பனை ஊராட்சி நிர்வாகம், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நிழற்குடை அமைத்துள்ளது. இதனை வெயில் மற்றும் மழை நாட்களில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல், சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும், இருக்கைகள் உடைந்துள்ளதால், பயணிகள் அமருவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நிழற்குடையை சீரமைப்பது அவசியம்.