/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த படகு இல்ல சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சேதமடைந்த படகு இல்ல சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சேதமடைந்த படகு இல்ல சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சேதமடைந்த படகு இல்ல சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 24, 2024 08:39 PM

ஊட்டி : ஊட்டி படகு இல்லம் சாலை ஆங்காங்கே பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து படகு இல்லம் செல்லும் வழித்தடத்தை தினமும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர், அரசு பஸ்கள் மற்றும் பிற கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஆங்காங்கே பெயர்ந்து வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. படகு இல்லத்திற்கு படகு சவாரிக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் சேதமான சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஊட்டி நகராட்சியில் பெரும்பாலான வார்டு சாலைகள் சேதமாகியுள்ளது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சீரமைப்பு பணி தாமதமாகி வருகிறது. நகராட்சியில் நிதி பற்றாக்குறை ஒருப்புறம் இருந்தாலும், இது போன்ற முக்கிய சாலைகளை சீரமைக்காமல் விட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, படகு இல்ல சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.