/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அருகே குடிநீர் தொட்டி சேதம்: வீணாகும் தண்ணீர்
/
பந்தலுார் அருகே குடிநீர் தொட்டி சேதம்: வீணாகும் தண்ணீர்
பந்தலுார் அருகே குடிநீர் தொட்டி சேதம்: வீணாகும் தண்ணீர்
பந்தலுார் அருகே குடிநீர் தொட்டி சேதம்: வீணாகும் தண்ணீர்
ADDED : நவ 25, 2025 07:07 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில், சேதமான குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பொன்னானி பஜார் பகுதியில், ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, கிராம மக்கள், அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பயன்படுத்தும் வகையில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டு உள்ளது.
ஆனால், குடிநீர் தொட்டி மற்றும் தொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதி சேதமாகி உள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காலை நேரத்தில் அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர், தங்களின் தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகம், குடிநீர் தொட்டியை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.