/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடி ஆனைக்கட்டி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு
/
மசினகுடி ஆனைக்கட்டி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு
மசினகுடி ஆனைக்கட்டி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு
மசினகுடி ஆனைக்கட்டி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு
ADDED : நவ 25, 2025 07:08 AM
கூடலுார்: மசினகுடி ஆனைக்கட்டி கிராமத்தில், நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், கிராம மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மசினகுடி ஆனைக்கட்டி கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கூடலுார் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு ஆனைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியான பாலமுருகன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில்,'வனத்தில் வசிக்கும் மக்களுக்கான வன உரிமை ன் சட்டம்; அவற்றை மக்கள் எவ்வாறு பாதுகாப்பது; சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் சட்ட ரீதியான உதவிகள்; அவற்றை எவ்வாறு பெறுவது; சட்டம் சார்ந்த உரிமைகள், கடமைகள்,' குறித்து விளக்கப்பட்டது. முகாமில், கிராம மக்கள் பங்கேற்றனர்.