/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரூராட்சியில் தொடரும் ஊழல் : நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு
/
பேரூராட்சியில் தொடரும் ஊழல் : நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு
பேரூராட்சியில் தொடரும் ஊழல் : நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு
பேரூராட்சியில் தொடரும் ஊழல் : நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு
ADDED : நவ 25, 2025 07:08 AM
குன்னுார்: குன்னுார் உலிக்கல் பேரூராட்சியில் ஊழல் நடப்பாத குற்றம் சாட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் சேலாஸ் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் சரவணன் தலைமை வகித்து பேசுகையில், ''உலிக்கல் பேரூராட்சியில் முழு அளவில் ஊழல் நடந்துள்ளது. துாய்மை பணியாளர்களிடம் கூட கமிஷன் வாங்கப்பட்டுள்ளது.
கக்காச்சி பாரதி நகரில், முன்னாள் பா.ஜ., எம்.பி., மாஸ்டர் மாதன் முயற்சியால் அமைக்கப்பட்டு நல்ல நிலையில், 800 சதுர அடியில் இருந்த சமுதாய கூடம், 1800 சதுர அடியில், 62 லட்சத்திற்கு ரூபாயில் கட்டுவதாக கூறி, அரசின் அனுமதியில்லாமல் இடிக்கப்பட்டுள்ளது.
அதில், பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாத பட்சத்தில், பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டமும் நடத்தப்படும்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்குமார் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.