/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலைகள் பழுதடையும் வாகனங்கள்
/
சேதமடைந்த சாலைகள் பழுதடையும் வாகனங்கள்
ADDED : மே 18, 2025 10:01 PM
குன்னுார் ; குன்னுார் உபதலை -பாய்ஸ் கம்பெனி சாலை சீரமைக்காமல் இருப்பதால் மழை நீர் தேங்கி உள்ளதுடன் வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன.
குன்னுார் அருகே பாய்ஸ் கம்பெனி -உபதலை சாலையில், அருவங்காடு ரயில் நிலையம் அருகில், மிகவும் பள்ளமான இடத்தில் 'இன்டர்லாக்' கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு சாலையோரத்தில் மழை நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இன்டர்லாக் மற்றும் தார் சாலை இணையும் இடத்தில், படிக்கட்டு போன்று, சேதமடைந்து உள்ளது. இங்கு தேங்கி நிற்கும் தண்ணீர், வெயில் காலங்களிலும் காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள், அதில் சிக்கி பழுதடைந்து வருகின்றன.
கன்டோன்மென்ட் வாரியம் மற்றும் உபதலை ஊராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்து மழைநீர் கால்வாய் வசதியுடன் சாலையை சீரமைக்க வேண்டும்.