/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் சேதமான சாலைகளால் பாதிப்பு
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் சேதமான சாலைகளால் பாதிப்பு
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் சேதமான சாலைகளால் பாதிப்பு
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் சேதமான சாலைகளால் பாதிப்பு
ADDED : செப் 29, 2025 09:47 PM
பந்தலுார்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவிக்குமார், ஏரியா செயலாளர்கள் மணிகண்டன், செரீப், சுபைர், சந்திரன் ஆகியோர் இணைந்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் அளித்த மனு:
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தினசரி நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் தமிழக இணைப்பு, சாலைகள் பெரிய அளவிலான, குழிகளாக மாறி வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதேபோல், பந்தலுார் அருகே நீர்மட்டம் பகுதியில் சாலை ஓரம் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் நிலையில், மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.
எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளை பாதிக்கும் நிலையில் உள்ள, சேதமான சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.