/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி 'டான்டீ' தொழிலாளர்கள் களம்
/
வன எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி 'டான்டீ' தொழிலாளர்கள் களம்
வன எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி 'டான்டீ' தொழிலாளர்கள் களம்
வன எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி 'டான்டீ' தொழிலாளர்கள் களம்
ADDED : ஜன 11, 2025 09:53 AM

கூடலுார் : கூடலுார் வனப்பகுதியில் ஏற்படும் வனத் தீ, அரசு தேயிலை தோட்டத்தில் பரவுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் பகுதியில் உள்ள, அரசு தேயிலை தோட்ட கழக (டான்டீ) நிறுவனத்துக்கு சொந்தமாக பாண்டியார், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம் தேயிலை கோட்டங்கள் உள்ளன. பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் வன எல்லை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், கோடை வறட்சியின் போது ஏற்படும் வனத்தீ, பரவி தேயிலை செடிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
இதனை தடுக்கும் வகையில், கோடைகாலத்தில் டான்டீ நிர்வாகம், வன எல்லையில், தீ தடுப்பு கோடுகள் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டு, கூடலுாரில் தொடரும் பனிப்பொழிவால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, வனத்தீ அபாயம் உள்ளது.
அவை, தேயிலை தோட்டத்தில் பரவி, செடிகள் பாதிக்கும், சூழல் உள்ளது. இதனை தடுக்க வன எல்லையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் 'டான்டீ' தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கோடை காலத்தில் வனத்தில் ஏற்படும் வனத்தீ, அரசு தேயிலை தோட்டத்தில் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக வன எல்லையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், பெருமளவில் தீ பரவுவதை தடுக்க முடியும்,' என்றனர்.