/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த அகழி வழியாக குடியிருப்புக்கு வரும் யானைகள் அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

ADDED : செப் 28, 2025 10:01 PM

கூடலுார்,; கூடலுார் பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்ட அகழி, சேதமடைந்துள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் (டான்டீ) தொழிலாளர்கள் குடியிருப்புகள், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் காட்டு யானைகள், இரவில் உண வுக்காக டான்டீ தேயிலை தோட்டம், தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றன.
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில், ஜீன்பூல் தாவரம் மைய எல்லையில், அகழி அமைத்தனர். தொடர்ந்து, யானைகள், குடியிருப்புக்குள் நுழைவது தடுக்கப்பட்டது.
தற்போது, பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள அகழி வழியாக காட்டு யானைகள் மீண்டும், இரவில் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் வந்து செல்ல துவங்கியுள்ளது. அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் அகழியை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'குடியிருப்பை ஒட்டி அகழி அமைக்கப்பட்டதால், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. தற்போது அகழி சேதமடைந்துள்ளதால், அதன் வழியாக காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்புக்குள் வந்து செல்கிறது. இதனால், இரவில் அவசர தேவைக்கு கூட வெளியே வரக்கூட அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த அகழியை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.